
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.கோவி. செழியனை நெல்லை எம்.பி ராபர்ட் புருஸ் சந்தித்தார். அப்போது, திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலை கழக உறுப்பு கல்லூரி தொடர்ந்து இயங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தார். இந்த கல்லூரியை திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஏற்கனவே அண்ணா பல்கலை கழகத்தால் நடத்தப்பட்டு வந்த பொறியியல், எம்.சி.ஏ உள்ளிட்ட அனைத்து மேற்படிப்புகளையும் மீண்டும் துவக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.