திருநெல்வேலியில் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்ற கோரிக்கை... பின்னணி என்ன?

request-to-change-the-district-revenue-officer-in-tirunelveli-what-is-the-background

திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம், இரு ஊழியர்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலரால் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை" ரத்து செய்ய வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரைக் கண்டித்தும் இன்று (மே 2) கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் கடந்த மே 29ம் தேதி காலை நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பு தலைமையில், மாநிலச் செயலாளர் செ. மாரிராஜா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மதவக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் ரஹ்மத் மீது "தவறான நடத்தை (அ) நெறி தவறி நடந்து கொள்ளல்" என்று பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தியது குறித்தும் லட்சுமண பாண்டியன் என்பர் பணிச்சுமை குறித்த கருத்து வெளியிட்டதாகவும் பொய்யான குற்றச்சாட்டு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டுகள் "பொய்யானவை மற்றும் தவறாக ஏற்படுத்தப்பட்டவை" என்று சங்கம் கருதுகிறது. இவற்றை ரத்து செய்யாவிட்டால் தொடர் இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலரைக் கண்த்து ஜூன் 2ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களும் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

மேலும், மாவட்ட வருவாய் அலுவலரைக் பணியிட மாற்றம் செய்வது தொடர்பாகவும் உயர் அலுவலர்களிடம் முறையிடுவதற்காக, இன்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.