உலக சுற்றுச்சூழல் தினம் : திருக்குறுங்குடி வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாணவர்கள்

world-environment-day-students-remove-plastic-waste-in-thirukuruungudi-forest

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி வனச்சரகம் சார்பில் திருக்குறுங்குடி வனச் சோதனை சாவடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டின் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், மாணவர்கள் தங்கள் கைகளில் "பிளாஸ்டிக் ஒழிப்போம்" என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர். வனச் சோதனை சாவடியில் இருந்து நம்பி கோவில் வரையிலான வனப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.

விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, வனத்துறையினருடன் இணைந்து 50-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் வனப்பகுதியில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், மாணவச் சமூகம் உணர்ந்து கொள்ளும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.