பல் பிடுங்கப்பட்ட விவகாரம் : அம்பை முன்னாள் ஏ.எஸ்.பி திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்

ambasamudram-prisoners-tooth-extraction-case-hearing-begins-today-in-tirunelveli-court

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சில மாதங்களுக்கு முன் காவல்துறை விசாரணையின் போது கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியத- இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளானவர் அப்போதைய அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) பல்வீர் சிங் ஆவார். இவருடன் மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு வெளியானதும், பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு, இன்று( ஜூன் 6)திருநெல்வேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், பல்வீர் சிங் மற்றும் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.