திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே விளை நிலத்தில் நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இன்று (ஜூன் 8, 2025) பிற்பகல் சுத்தமல்லி பகுதியில் நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நெல் அறுவடை இயந்திரம் நிலத்தில் கவிழ்ந்தது. இதில் இயந்திரத்தை இயக்கிய முருகேஷ் மற்றும் சன்னியாசி (75) ஆகியோர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு இயந்திரத்தில் சிக்கியிருந்த இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சன்னியாசி (75) உயிரிழந்தார். முருகேஷ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேட்டை தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையாலும், கடுமையான மீட்புப் பணிகளாலும் இரண்டு பேரும் மீட்கப்பட்டபோதிலும், ஒருவர் உயிரிழந்தது சுத்தமல்லி பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










