
அஸ்ஸே நடுநிலைப் பள்ளியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் தலைமையில் நேற்று நடைபெற்றது.நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராஜகோபால் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் டாக்டர்கள் எஸ்.கே.கிறிஸ்டோபர், சி.இளவரசன்,ராமராஜ், ஸ்வேதா, பிரவீன் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.இலவச ரத்தசுகர் பரிசோதனை,ரத்தஅழுத்த பரிசோதனை,பல் பரிசோதனையுடன் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் கண் பரிசோதனை செய்தனர்.இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் செய்திருந்தார். பணகுடி நகர செயலாளர் வில்சன், இணை செயலாளர் முத்து,ஒன்றியச் செயலாளர் நாகராஜ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.