
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி உப்பூர் ஊர்க்காடு சுடலைமாடசாமி கோவில் கொடை விழா கடந்த 6-ம் தேதி இரவு நடைபெற்றது. நள்ளிரவு12 மணிக்கு நடைபெற்ற சாமக்கோடையில் வேட்டைக்குச் சென்ற சாமியாடிகள் சுடுகாட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், கோவிலுக்கு திரும்பிய போது மனித தலை மற்றும் கை கால்களுடன் வந்து ஆடியது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வெள்ளங்குளி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மனித தலையுடன் சாமியாடிய பூசாரிகள் 5 பேர் மீது வீரவநல்லூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..