
திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம் பகுதியில் உள்ள முத்து என்பவருக்குச் சொந்தமான பழைய மரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் இன்று (ஜூன் 9)பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் மற்றும் பிற பொருட்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்ததும், திருநெல்வேலி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.