கருத்தடைக்கு பிடிக்கப்பட்ட நாய்கள் பலி... மாவட்ட ஆட்சியருக்கு சென்ற மனு

Dogs-taken-for-sterilization-die-Petition-sent-to-the-District-Collector

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் குப்பைக் கிடங்கு அருகே " ஜீவ காருண்யா என்ற அறக்கட்டளை மாநகராட்சி ஒப்புதலுடன் கருத்தடைக்காக பிடித்த நாய்களை கூண்டுகளில் அடைத்து வைத்துள்ளளனர். சரியாக உணவு வழங்கி அவற்றை பராமரிக்கவில்லை. கடந்த ஜூன் 2 ம் தேதி கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த நாய்களில் இரண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் தாரிக்ராஜா உள்ளிட்டவர்கள் இன்று( ஜூன் 9) நெல்லை மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, ' நாய்கள் இறந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், இன்று வரையிலும், இந்த கொடுமைகளுக்கு காரணமான அமைப்பின் மீது எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. அமைப்பின் உரிமையாளரான கால்நடை மருத்துவர் மீதும், அலட்சியமாக செயல்படும் பணியாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை . அந்த அமைப்புக்கு தடை விதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும், அவர்கள் பணியை செய்து கொண்டுதான் உள்ளனர். எனவே, வாயில்லா பிராணிகளை பாதுகாக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். '

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.