இந்தி எழுத்துக்களை அழித்தது குற்றம்தான் - நீதிபதியிடம் ஒப்புக்கொண்ட திமுகவினர்

Destroying-Hindi-script-is-a-crime-DMK-members-admit-to-judge

பாளையங்கோட்டை ரயில் நிலைய பெயர் பலைகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்த வழக்கில், திமுக மாநில நிர்வாகி உட்பட ஏழு பேருக்கு தலா ரூ. 2000 அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன. மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிலர் அந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி நான்காவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (ஜூன் 9) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்தி எழுத்துக்களை அழித்தது குற்றம் என்பதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் எம்.பி. ராஜவர்மன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் தலா ரூ. 2,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, இந்த வகையான குற்றங்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 2.000 அபராதம் விதிக்க வழிவகையுள்ளது. நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் உடனடியாக தலா ரூ.2000 அபராதத்தைச் செலுத்தி விடுதலை ஆனார்கள்.