
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார் குளத்தை சேர்ந்தவர் ராம சிவன் (வயது 35). கட்டட தொழிலாளி. இவருக்கும் பணகுடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கடந்த 2202ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமிக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் முதலாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது , அடுத்ததாக அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த நாங்குநேரி கிராம நிர்வாக அதிகாரி அமலை ரோஸ் நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து, ராமசிவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.