நெல்லையில் 9 பேருக்கு கொரோனா மக்களே ஜாக்கிரதை

corona-cases-increases-in-nellai

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் கொரனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சளி அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு நீங்கி விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 73 வயது முதியவர் மற்றும் சுத்தமல்லி பாரதி நகர் பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர ரெட்டியார்பட்டி, பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வந்தவர்களும் குணமாகி விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.