.jpg)
நெல்லை கொக்கிரகுளம் ரோஸ் கார்டன் பகுதியில் இ பைக் ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது . இந்த ஷோரூமின் பின்புறத்தில் இ பைக் சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று( ஜூன் 10) காலை வழக்கம் போல் ஊழியர்கள் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டரை திறந்துள்ளனர். பின்னர், ஊழியர்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தபோது திடீரென 10 அடி நீளமுள்ள பாம்பு சர்வீஸ் சென்டரில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .
உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை போராடி மீட்டு வனத்துறை இடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்பு சாரைப்பாம்பு ரகத்தை சேர்ந்தது. 4 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.