வள்ளியூரில் காதலை தடுத்த காதலியின் தந்தைக்கு அரிவாள் வெட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி வள்ளியூர் போலீசார் விசாரணை

vallioor-arivaal-vettu-to-girlfriend-s-father-for-preventing-love

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகன் (வயது 50). இவர் வள்ளியூரில் வாப் சாமான்கள் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். தனியார் கல்லூரியில் பயின்று வரும் இவரது மகள் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அழகனுக்கு தெரியவர காதலனை அழைத்து எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சூழலில், அழகன் கடைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மகளின் காதலன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த அழகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பம் குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலியின் தந்தையை அரிவாளால் வெட்டிய காதலனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் வள்ளியூரில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.