நீட் தடை பற்றிய கேள்வி: திருநெல்வேலியில் மவுனமான மார்க்சிஸ்ட் கட்சியின் கனகராஜ்

kanagaraj-press-meet-in-nellai

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வீட்டு வரி, சொத்து வரி , குடிநீர் , பாதாள சாக்கடை கட்டண உயர்வுகளை கைவிட வேண்டும் . குப்பை வரியை கைவிட வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் முறைகேடுகளை குறைபாடுகளை களைய வேண்டும்.

வாக்குறுதிபடி மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கிட வேண்டும். இதனை தமிழக அரசுக்கு வலியுறுத்தும் விதமாக வருகினற ஜூன் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் தழுவிய பிரச்சாரம் மேற்கொள்கிறோம். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் மேலப்பாளையம் ,பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாநகரம் , ராதாபுரம் , நாங்குநேரி , களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 3 1/2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை 'என்றார்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்காக ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது தெரிவித்திருந்தாரே... அந்த ரகசியம் என்னவென்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதும். பதிலளிக்க முடியாமல் கனகராஜ் மவுனமாகி விட்டார்.