
திருநெல்வேலி, மாவட்டம் களக்காடு தலையணை சூழல் சுற்றுலாப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
களக்காடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, ஜூன் 14 முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு தலையணைப் பகுதியில் குளிப்பதற்கும், பார்வையிடுவதற்கும் தற்காலிகமாக அனுமதி நிறுத்தப்படுவதாக களக்காடு வனச்சரகம் அறிவித்துள்ளது.
அதே போல, மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று (ஜூன் 14) முதல் மணிமுத்தாறு அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை, அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தின் துணை இயக்குநர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.