ஆனி மாத பிறப்பு: பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை

cow-pooja-in-palayamkottai-temple

ஆனி மாத பிறந்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் ஆனி மாத பிறந்ததையொட்டி கோ பூஜை நடைபெற்றது . இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது .

பின்னர் கோவில் பெரிய திருவடி சன்னதி முன்பு கன்றுடன் கூடிய பசு அழைத்துவரப்பட்டு கோ பூஜை நடைபெற்றது . தொடர்ந்து பசுவுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. உலக நன்மை வேண்டி சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதையடுத்து, பசுவுக்கு அரிசி வெல்லம் பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுவிற்கு அரிசி, பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர்.