வரலாற்று சிறப்புமிக்க நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகிற ஜூலை மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ள ஆனித்தேரோட்ட விழாவை முன்னிட்டு, சுவாமி மற்றும் அம்பாள் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுளளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆனித்தோரோட்டம் ஜூலை 8-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்காக சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தேர்களையும் தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நெருங்கி வருவதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், சுவாமி மற்றும் அம்பாள் தேர்களின் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து, நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துணை கமிஷனர் (மேற்கு) பிரசன்னகுமார் கூறுகையில், "நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சுவாமி மற்றும் அம்பாள் தேர்களுக்கு நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடு, திருவிழா நடைபெறும் 8-ந் தேதி வரை தொடரும்" என்று தெரிவித்தார்.










