நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் கூட்டப்புளியைக் சேர்ந்தவர் ஜெய்ஷோ.எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவர் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது வாயில் வைத்திருந்த ஆணியை எதிர்பாராத விதமாக விழுங்கி விட்டார்.இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த தகவலை கேள்வி பட்ட திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் ஆலோசனையின்படி, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெய்ஷோவை சந்தித்தார்.
பின்னர், அவரின் சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். வள்ளியூர் ஒன்றிய செயலாளர் நாகராஜன், கூட்டப்புளி கென்னடி, முத்துராஜ் வழக்கறிஞர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.










