நெல்லை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கமம்

nellai-st-xavier-s-school-students-alumni-meet


நெல்லை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 1974 முதல் 1981 ஆம் ஆண்டு வரை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விழாவிற்கு முன்னாள் மாணவர் மன்ற இயக்குநரும் தாளாளருமான அருட்தந்தை ஆல்பர்ட் ஜோசப் தலைமை தாங்கினார்.முன்னாள் மாணவர் மன்ற தலைவர் மணி,லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சிலுவை அருள் மரிய ஜோசப் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவர் சுரேஷ் குமார்,நெடுஞ்சாலைத் துறை கோதண்டராமன் மற்றும் பல்வேறு துறையில் பணியாற்றியவர்கள் பள்ளியில் தாங்கள் கற்று கொண்ட ஒழுக்கத்தையும் கல்வியையும் பெருமையோடு நினைவு கூர்ந்தனர்.

முன்னாள் ஆசிரியர்கள் போர்ஜியோ,சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னாள் மாணவர்களை ஆனையப்பன்,அமல சேவியர் ஒருங்கிணைத்தனர்.விழா நிகழ்வுகளை முன்னாள் மாணவர் மன்ற செயலர் பால் கதிரவன்,கூடுதல் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

துணைச்செயலாளர் சூசை அமல்ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.