ரயில்வே தேர்வு... திருநெல்வேலியை சேர்ந்தவருக்கு கேரளா வர்காலாவில் தேர்வு மையம்:நெல்லை எம்.பி கண்டனம்

rabert-bruce-mp-criticiszed-railway-board

திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 23ம் தேதி ரயில்வே துறை வேலை வாய்ப்புக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில், நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த மாணவி ரத்னா என்பவருக்கு திருவனந்தபுரம் அருகேயுள்ள வர்கலாவில் இருந்து 18கி.மீ தொலைவிலுள்ள கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இங்கு, தேர்வு மையம் அமைக்காமல் கேரளாவில் சென்று தேர்வு எழுத சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன். இப்படி, தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைத்தால், தமிழக மாணவர்கள் ரயில்வே தேர்வு எழுத வர மாட்டார்கள் என்று ரயில்வே போர்டு நினைக்கிறதா? என்ற அச்சதே எழுகிறது.

எனவே, அந்த அந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம்தை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தி, மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.