நெல்லை மருத்துவக் கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்

yoga-day-in-nellai-hospital

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமை தாங்கினார். யோகா பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு உதவி மருத்துவ அலுவலர் உமாமகேஷ்வரி விளக்கமளித்ததார்.

நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவர்கள் யோகா பயிற்சி பெற்றனர்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், உதவி உறைவிட மருத்துவ அலுவலர் எஸ்தர், பொது மருத்துவ துறை பிரிவு தலைவர் ரத்தினகுமார், செவிலியர் பயிற்சி பள்ளி பயிற்றுநர்கள் மற்றும் இயற்கை மற்றும் யோகா துறையின் உதவியாளர்கள் பங்கேற்றனர்.