பாவமாக அலையும் பாப்பாகுடி கவுன்சிலர்... 5 மாதமாக குடிநீருக்காக தொங்க விடும் அதிகாரிகள்

papakudi-water-issue

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் செந்திவேல் நெல்லை மாவட்ட ஆட்சியரிடத்தில் அளித்த மனுவில் கூறியியுள்ளதாவது,' எனது வார்டில் சுமார் 5 மாத காலமாக குடிநீர் வரவில்லை. இது தொடர்பாக பாப்பாக்குடி ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தெரிவித்தேன். கிராம சபை கூட்டத்திலும் மனு அளித்தேன். அதன் பிறகு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு நேரில் சென்று மனு அளித்தேன்.

பின்னர், கடந்த மே 5ஆம் தேதி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது வார்டில் சுமார் 50 குடும்பங்கள் குடிதண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றன. எனவே , எங்களுக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.