மகேந்திரகிரி இஸ்ரோ உந்துசக்தி வளாகத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட பி.எஸ்.4 (PS4) இன்ஜின் சோதனை 665 விநாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையம், இந்தியாவின் விண்வெளிப சானைகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இங்கு ராக்கெட்டுககை விண்ணில் செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜெனிக் , விகாஷ் , மற்றும் பி.எஸ்.4 இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் லட்சிய திட்டமான ககன்யான் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளுக்கு தேவையான இன்ஜின்களும் இந்த மையத்தில் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, பி.எஸ்.எல்.வி (PSLV) ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட பி.எஸ்.4 இன்ஜின் பரிசோதனை நேற்று நடைபெற்றது.
இந்த சோதனை665 வினாடிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இன்ஜின் முழுமையாக இயங்கியதால், சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த வெற்றி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு, ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.










