பேட்டை காமராஜர் நகர்மன்ற பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

drug-awareness-rally-at-pettai-kamarajar-municipal-council-school

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். பேரணியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விமலன் உதவி ஆய்வாளர்கள் இசக்கி சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி, உடற்கல்வி இயக்குனர் வீரபாண்டி, ஓவிய ஆசிரியர் அங்கு ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் போதை பொருட்கள் ஒழிப்பு மன்ற ஆசிரியர் பாபு சங்கர், ஆசிரியை மாரியம்மாள் செய்திருந்தனர்.