திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தில் நடந்த பேச்சு, கட்டுரை,ஓவியப் போட்டிகளில் திசையன்விளை ஜெயராஜேஷ் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று அசத்தியுள்ளனர். திருநெல்வேலி தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பாக ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி மாவட்ட முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் திசையன்விளை ஜெயராஜேஷ் பள்ளி மாணவி கன்சிகா மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். கட்டுரைப் போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் அதே பள்ளி மாணவி சூரியா ஸ்ரீ மாவட்ட அளவில் முதல் பரிசும், ஸர்னிதா மாவட்ட அளவில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
9 முதல் 12-ம் வகுப்பு பிரிவில் மைக்கேல் பெர்சிபா மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். ஓவிய போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் மைக்கேல் தேவ சகாய பெனிஸ் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், 9 முதல் 12 ஆம் வகுப்பு பிரிவில் சுஜிதா மாவட்ட அளவில் முதல் பரிசும், மீனாட்சி மணிகண்டன் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சங்கரன்கோவில் ராம்கோ கல்லூரி பேராசிரியர் ராஜேஸ்வரி தூய . சவேரியார் கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் ஆகியோர் பரிசினை வழங்கி பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் ராஜேஸ்வரன் பள்ளியின் முதல்வர் இராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் பாராட்டினர்.









.jpg)
