திருநெல்வேலி: களவாணி கல்குவாரிகளால், பாதிக்கப்பட்ட நேர்மையான கல்குவாரிகள்!

tirunelveli-quarry-ownerss-request-to-grant-permission-to-operate-quarries

திருநெல்வேலி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன . அவற்றில், சில கல்குவாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து அனைத்து கல் குவாரிகளுக்கும் நடை சீட்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கல்குவாரிகளில் பணிகள் முடங்கி கிடக்கின்றன.

பல கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது கல்குவாரிகளில் அதிகாரிகள் அளவீடு செய்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அதற்கு உரிய அபராதம் விதிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் சில குவாரி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

நியாயமான முறையில் செயல்பட விரும்பும் குவாரி உரிமையாளர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றனர். எனினும், அதிகாரிகள் முறைகேடு குற்றச்சாட்டுக்கள்ளான குவாரிகளை ட்ரோன் சர்வே மூலம் அளந்து அபராதம் விதிக்க வேண்டும். நியாயமான முறையில் செயல்படும் கல் குவாரிகளுக்கு நடை சீட்டு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.