இந்து அறநிலையத்துறையை அரசு கை விடுமா? - நாகர்கோவிலில் சபாநாயகர் விளக்கம்

aappavu-explanation-about-hindu-religious-and-charitable-endowments-department

முருக பக்தர்கள் மாநாட்டில் “இந்து அறநிலையத்துறை அரசு கை விட்டுவிட வேண்டும்” என்ற தீர்மானத்திற்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தத் தீர்மானம் நடைமுறைப்பத்தப்படாது. சுதந்திரம் கிடைத்த பிறகும், 10% உயர் சாதி இந்துக்களை தவிர மற்றவர்கள் இந்து ஆலயங்களுக்கு செல்ல முடியாத அவல நிலை இருந்தது. அந்த சமயத்தில் அரசு தலையிட்டு, சமத்துவத்தைக் கொண்டு வந்தது.

அனைவரும் ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் உரிமையை பெற்றதால், இன்று 90% இந்துக்கள் தங்கள் சுயமரியாதையை உணர்ந்து வாழ்கிறார்கள். இன்று இந்து அறநிலையத்துறையை மீண்டும் 10% உயர் சாதியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஆசை அவர்களிடம் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது. அறநிலையத்துறை, அனைத்து இந்துக்களுக்குமானது. தொடர்ந்து அரசின் கையில்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.