தேனும் பழங்களும் தயார்... திசையன்விளை கரடியை பிடிக்க தாஜா செய்யும் வனத்துறை

the-cage-is-ready-to-catch-the-bear-in-tisaiyanvilai

திசையன்விளை அருகே விவசாயியை கடித்து குதறிய கரடியை பிடிக்க இரண்டு கூண்டுகள் வனத்துறையால் காரியாண்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா காரியாண்டிia சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் . இவருக்கு காரியாண்டி குளம் பகுதியில் விவசாய தோட்டம் இருக்கிறது. நேற்று மதியம் வழக்கம் போல தனது வாழைத்தோட்டத்திற்கு சென்ற பாலகிருஷ்ணனை பார்த்த கரடி ஒன்று கடித்து குதறியது .

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கரடியை பிடிக்க அந்தப் பகுதியில் தற்போது கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளனர். கரடிக்கு பிடித்த உணவான தேன், பழங்கள் கூண்டுக்கு அருகே வைக்கப்பட்டுள்ளன. கரடி பிடிபடும் வரை அந்தப் பகுதிக்கு தோட்டத்துக்கு செல்ல வேண்டாமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.