அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டம் சார்பில் நெல்லை -தூத்துக்குடி, நெல்லை- நாகர்கோவில், நெல்லை-பாபநாசம், நெல்லை -தென்காசி, நெல்லை -மதுரை போன்ற நகரங்களுக்கிடையே ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளன. அதோடு, ஏசி பழுதாகி உள்ளதால் பயணிகள் அவஸ்தை பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, நெல்லை தூத்துக்குடி இடையே இயக்கப்படும் ஏ.சி பஸ்களில் ஏசி இயங்குவதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏசி இயங்கினாலும் இயங்காவிட்டாலும், அதற்குரிய கட்டணத்தைதான் வசூலிக்கிறார்கள். ஆனால், இந்த பேருந்துகளில் ஜன்னல் இல்லாத காரணத்தினால், ஏசி இயங்கவில்லையென்றால் புழுக்கத்துடன் பயணிகள் பயணிக்க வேண்டியதுள்ளது . இதனால், ஏசி பஸ் என்றால், கட்டாயம் ஏசி இயங்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










