திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் தேரோட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற சிவன் ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில் ,வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த வாலிபர்கள் இன்று நெல்லையப்பர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.முதலில் அவர்கள் கோவிலின்பாராம்பரியம் அறியாமல் டவுசர், அணிந்து உள்ளே சென்றனர். பின்னர், அங்கிருப்பவர்கள் வேஷ்டி அணிந்து வரும்படி அவர்களை அறிவுறுத்தினர் இதையடுத்து, அருகிலுள்ள கடைகளுக்கு சென்று வேஷ்டி வாங்கினர். பின்னர்,வேஷ்டி அணிந்து சென்று நெல்லையப்பரை வழிபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நெல்லையப்பர் கோவிலில் சிற்பங்கள் அனைத்தும் தங்களை கவர்ந்துள்ளன. சிவனை வழிபட்டுள்ளதால் தங்களுடைய மனம் நிம்மதி அடைந்துள்ளதாகவும் ஒருவித பாசிட்டிவ் வைப்ரேஷன் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்










