நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வை தொடங்கினார்...நகரில் அதிரடி சுற்றுபயணம்

nellai-corporation-commissioner-begins-inspection-work

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையளாராக மோனிகா ராணா பதவியேற்றுள்ளார். தற்போது,அவர் தனது பணிகளை தொடங்கியுள்ளார்.

தச்சநல்லூர் பகுதியிலுள்ள பெரியார் பேருந்து நிலையம் தமு சாலையிலுள்ள கழிவு நீர் ஓடையை அவர்இன்று பார்வையிட்டார். அதை தூர் வாறவும் உத்தரவிட்டார். பின்னர், ராமையன்பட்டியிலுள்ள குப்பை கிடங்குக்கு சென்றார். அங்கு, மக்கும் மக்காத குப்பைகள் தரம் பிரிப்பதை ஆய்வு செய்தார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு செய்தார். அங்கு, பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நயினார்குளம் பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டு, விரைவில் முடிக்க உத்தரவிட்டார். டவுனிலுள்ளபாரதிய பள்ளிக்கும் சென்று ஆய்வு நடத்தினார். ஆசிரியர்கள், மாணவர்களிடத்தில் குறைகளை கேட்டறிந்தார். அதன் அருகில் ஓடும் சாக்கடை கால்வாயை முறையாக தூர் வாறவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் ஜான்சன் தேவசகாயம் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.