திருநெல்வேலி கோபிநாத் கோச் மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக குழந்தைகள் தடகள போட்டி இன்று காலை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியை செந்தூர்பாண்டியன் தொடங்கி வைத்தார் . நாரணமாள் புரம் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒட்டு மொத்த சாம்பியனுக்காக கோப்பையையும் முதல் பரிசு 5 ஆயிரத்தையும் தட்டி சென்றது.
இரண்டாவது இடத்தை ஃபால்கன் அகாடமி பெற்றது. பரிசுத்தொகை 3 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசுகளை சஞ்சய் டிராவல்ஸ் உரிமையாளர் கார்த்திகேசன் அவர்கள் வழங்கினார். ஆறுமுகம் ஜாய், மோனிகா, ஸ்வேதா, தேன்மொழி, முத்து செல்வன் ராம்குமார் நிகில் சக்ஸ் மணிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் இந்நிகழ்ச்சியை ஸ்கின்னர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.










