நெல்லையப்பர் கோவில் ஆனித் திருத்தேர் திருவிழாவில் ஜாதி ரீதியான அடையாளங்கள் பயன்படுத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ஆனி திருவிழாவுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தினமும் நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஷர் செய்த அமைப்புகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
அதில், பிள்ளையன் கட்டளைகள், நயினார் தேவர், நாடார் உறவின்முறை என்று சாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், சாதிகளை அடையாளப்படுத்துவதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை . சாதியற்ற சமூகம் படைக்கப்பட வேண்டும் என்கிற நிலையில், அரசின் ஒரு துறையே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என்கின்றனர்.










