திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸின் வெற்றியை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வாதங்களை முன் வைத்து விரைவாக தீர்ப்பளிக்க முடிவு செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த நடைபெற்ற லோக்சபா பொதுத் தேர்தலில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ராபர்ட் ப்ரூஸ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, தனது குற்றப் பின்னணியை வெளியிடவில்லை அசையா சொத்துகள் குறித்த தகவல்களை மறைத்துள்ளார் என்பதும் நயினார் நாகேந்திரன் வைத்த முக்கியமான குற்றச்சாட்டு. இந்த வழக்கில் ராபர் புரூஸ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆராய 7விதிகளை நீதிமன்றம் வகுத்துள்ளது.
நயினார் நாகேந்திரன் வைத்த குற்றச்சாட்டுகள் மீது உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சிகள் விசாரணை வரும் ஜூலை 19 ம் தேதி தொடங்கும். விசாரணை தொடங்கிய நாளிலிருந்து 15 நாட்களுக்குள், ஒவ்வொரு நாளும் சாட்சிகளை விசாரித்து வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இடைதேர்தல் வர வாய்ப்புள்தால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.










