தமிழகத்தில் கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்துக்கு,முதல்வரின் வீடுகள் மறு கட்டுமானத்திட்டம் என பெயரிடப்பட்டு, இந்த ஆண்டுக்கு முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14-ம் தேதி தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களுக்காக கட்டப்பட்டு தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித்தர அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் புதிய வீடுகள் ரூ.600 கோடி மதிப்பில் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின் கீழ் இன்று (ஜூலை 2)அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகளை பழுது பார்ப்பதற்கான ஆனையை அம்பாசமுத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் பரணி ஆர்.சேகர் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சில் அருண்தவசுபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.










