சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் முதல் நாள் திருவிழாவில் சொற்பொழிவாற்றிய தேசமங்கையர்கரசி தனது பேச்சை வீடியோ பதிவு செய்ய கூடாது என கூறினார்.நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு லட்சக்கணக்கில் கப்பம் கட்டி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் "மா டிவி " உள்ளூர் தொலைக்காட்சி வீடியோகிராபர் ,நாங்கள் பணம் கட்டி நேரடி ஒளிபரப்பு செய்வதை நீங்கள் எப்படி தடுக்கலாம்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே, தேசமங்கையர்கரசி தரப்பினருக்கும் உள்ளூர் நிருபர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நீங்கள் 60ஆயிரம் பணம் வாங்கி கொண்டு தானே பேசுகிறீர்கள்... பொது கோவிலில் வந்து பேசுவதை வீடியோ எடுக்ககூடாது என எப்படி தடுக்கலாம். உங்கள் இடத்திற்குள் வந்து வீடியோ எடுத்தால்தான் தவறு என்று சொல்ல உங்களுக்கு உரிமையுள்ளது என்று செய்தியாளர்கள் விவாதம் செய்தனர். அப்போது, நிகழ்ச்சிக்கு என்னை புக்கிங் செய்யும் போதே வீடியோ எடுக்க கூடாது கூறி விட்டதாக தேசமங்கையர்கரசி தரப்பில் கூறப்பட்டது. இறுதியில் 'மா டிவி' நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. பிரச்சனையை அப்படியே அமுக்கியது அறநிலையத்துறை. பாதிக்கப்பட்டோரும் கூட வாய்திறக்கவில்லை. தற்போது, தேசமங்கையர்கரசியின் பெருமையை நெல்லை மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.










.jpg)