திருநெல்வேலி ஓவிய ஆசிரியருக்கு தமிழக அரசு விருது

tisaiyanvilai-teacher-award-wiinner

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற செங்கல்பட்டுவை சேர்ந்த சங்கர், மதுரை சிவகதன், திருசெல்வேலி ஓவிய ஆசிரியர் ஞானசேகர் உள்ளிட்ட 6 பேருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சுவாமிநாதன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இந்த விருதையும் பாராட்டையும் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஞானசேகர், முனைஞ்சிப்பட்டி பள்ளியில் ஓவிய ஆசியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது, பல மாணவ மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி அளித்து வருகிறார். விருது பெற்ற ஓவியஆசிரியர் ஞானசேகருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.