நெல்லை மாவட்டம் திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கள் தின விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, பள்ளியின் எல்கேஜி மாணவவர்கள் ஓவ்வொரு வரும் ஒவ்வொரு விதமான பழங்களை பள்ளிக்கு கொண்டு வந்திருந்தனர். அதே போல, அந்த பழங்களை படமாக வரைந்து கழுத்தில் அணிந்திருந்தனர். பழங்கள் சாப்பிடுவதன் அவசியம் உடலுக்கு அவை தரும் நன்மைகள், பெருமைகளை பற்றியும் சக மாணவர்களுக்கு விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளை பள்ளி தாளாளர் ராஜேஷ்வரன் , முதல்வர் ராஜேஷ்வரி வெகுவாக பாராட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் கவிதா ,மேரி சுபா, சிவரஞ்சனி,சமீரா பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.










.jpg)