
திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக கராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருநெல்வேலி பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மீதமிருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். எனினும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தின் அறிவுரைகளைப் பெற்று, அதற்கேற்ப அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார்.
வரும் ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அமைச்சர் கே.என்.நேரு மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று மக்களின் தேவைகளைக் கேட்டறிய முடிவு செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா சுகுமார் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்த போது, நானும் உடன் இருந்தேன். அமைச்சர் கே.என்.நேரு ஜூலை மாதம் 19 அல்லது 20 தேதிகளில் மாஞ்சோலை செல்கிறார் என்று கலெக்டர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனை இறுதி முடிவுக்கு வரும் என்று பார்க்கப்படுகிறது: