தனித்து போட்டி என்ற விஜய் அறிவிப்பால் சேரன்மாதேவி வந்த கனிமொழி முகத்தில் புது உற்சாகம்

vijay-s-announcement-of-competing-alone-brings-new-excitement-to-the-kanimazhi-mp

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் நடைபெற்ற "ஓரணியில் தமிழகம்" நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கூட்டணி அமைத்து 2026ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்து போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதானால், ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ன சேரன்மாதேவி வந்திருந்த கனிமொழி எம்.பி முகத்தில் புது உற்சாகம் காணப்பட்டது

சேரன்மகாதேவியில் கனிமொழியிடம் திமுகவும் தேவையில்லை, அதிமுகவும் தேவையில்லை, த.வெ.க தனித்துப் போட்டியிடும் என்ற விஜய்யின் அறிவிப்பு குறித்து கேட்டபோது, "நிறைய அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறார்கள். தனித்துப் போட்டியிடுவது என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்களுக்கு வாழ்த்துக்கள். சில பேர் விஜய்யின் இந்த முடிவால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கலாம்.

ஆனால், வெற்றி திமுகவுக்குதான். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்குத்தான். திமுக கூட்டணியின் உறுதியானவெற்றிக்கு "ஓரணியில் தமிழகம்" நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும்போதே நன்றாகத் தெரிகிறது.திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டுள்ள எந்த ஒரு அரசியல் கட்சிகளும் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.