
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஜூன் 8ம் தேதி ஆனி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
பின்னர், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழி சாலை பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். சாலை அமைக்கும் பணி நடந்து வரும் கொங்தான்பாறை விலக்கு பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி . செழியன், பாளையங்கோட்டை எம்.பி. அப்துல் வகாப், நெல்லை ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா ஆகியோர் உடனிருந்தனர்.