
நெல்லை மாவட்டம் கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 13ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது ஒவொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10ம் திருவிழாவான 13ம் தேதி காலை முதல் திருப்பலியை கோட்டாறு மறை மாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை. சகாய கிளாசின் வழங்குகிறார். காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.இதில், தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை செயலர் அந்தோணி ஜெகதீசன் , அருட்தந்தை அற்புத சேவியர் இறையுரை வழங்குகின்றனர்.மதியம் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. அதே தினத்தில்,மாலை 7.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அன்னம்மாள் ஆலய அருட்தந்தை மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர். தொடர்ந்து, ஜூலை 26ம் தேதி மாலை 7 மணிக்கு கூடங்குளம் அன்னம்மாள் ஆலயத்தில் அசன திருவிழாவும் நடைபெறுகிறது