
திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் கீழநத்தம் பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே இன்று காலையில் திடீரென குடிநீர் குழாய் உடைந்தது. இதையடுத்து, தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இதன் காரணமாக சாலை முழுவதும் குடிநீர் ஓடியது. தற்பொழுது வெளுத்து வாங்கும் வெயில் நேரத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். இந்த சூழலில் குடிநீர் வீணான சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.