
நெல்லை வண்ணாரப்பேட்டையிலுள்ள எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் தி ரைஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு தொடங்கியது. தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்ட பேரவை தலைவர் அப்பாவு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, ஆட்சியர் சுகுமார் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேலை வாய்ப்பு முகாமில் 195 தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணிகளை வழங்கவுள்ளன. சுமார் 15, 000 பட்டதாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலைக்குள் முகாம் மூலம் 6,000 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.