நெல்லையில் ஸ்விகி டெலிவரி பணியாளர்கள் போராட்டம் ...பின்னணி என்ன?

Swiggy-delivery-workers-protest-in-Nellai

நெல்லை நகரில் ஸ்விகி நிறுவனத்தில் 150 பணியாளர்கள் டெலிவரி சேவையில் ஈடுபட்டுள்ளனர் .இவர்களில் 60 பேர் முழு நேர பணியாளர்களாக டெலிவரி பணியில் உள்ளனர். மகாராஜா நகர், பெருமாள்புரம் உள்ளிட்ட ஏழு கிலோ மீட்டர் சுற்றளவில் அந்த நிறுவனத்தினர் பொது மக்களுக்கு தேவையான மளிகை சாமான்களை டெலிவரி செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் புதிதாக வந்த டீம் லீடர் செல்வகுமார் என்பவர் பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவதாக சர்ச்சை எழுந்தது. சிலரை பணியை விட்டு நீக்கியதாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இதை கண்டித்து கடந்த மூன்று நாட்களாக டெலிவரி பணியாளர்கள் ஸ்ட்ரைக் செய்தனர். 4வது நாளாக இன்றும் டெலிவரி பணியாளர்கள் அலுவலகத்திற்கு முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்விகி ஊழியர்களுக்கும் டெலிவரி பணியாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . தகவல் அறிந்து மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, டெலிவரி பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணியை தொடர்ந்தனர்