திசையன்விளை பேரூராட்சியில் குடிநீர் தொட்டி பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

Foundation-stone-laying-ceremony-for-water-tank-construction-in-tisaiyanvilai

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 4 வது வார்டு சுடர் நகரில் 15 வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ 4 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு ‌ குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திசையன்பேரூராட்சி தலைவி ஜான்சிராணி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், கவுன்சிலர்கள் லிவ்யா சக்திவேல் குமார்,பிரதீஸ்குமார், முத்துக்குமார், பீட்டர், அசன் மைதீன் ஓவர்சீயர் விஜய பாரதி அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் சாந்தகுமார், பிரதீப் ஸ்வீட்ஸ் அதிபர் முருகானந்தம்,சுபாஷ், பாஸ்கர், மணிகண்டன், நடராஜன்,லிங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.