.jpg)
நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள டைல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் தச்சநல்லூர் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் டைல்ஸ் மற்றும் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்படும் குடோன் அமைந்துள்ளது. இங்கு, நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி குடோன் முழுதும் தீக்கிரையானது . இதையடுத்து, கூடுதலாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்து இரண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடந்தது. சம்பவ இடத்தில் தச்சநல்லூர் போலீசாரும் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நள்ளிரவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர் .5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பொருட்கள் தீயில் கருசி நாசமானமாக சொல்லப்படுகிறது.