திருநெல்வேலி சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் மாம்பழச் சங்க பண்டிகை தொடங்கியது. இதை முன்னிட்டு புதுப்பேட்டை சேகரம் கொண்டா நகரம் கிறிஸ்து ஆலயத்தில் சேகர குரு சுரேஷ் முத்துக்குமார் ஆலோசனையின் பேரில் இன்று காலை மாம்பழச் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. சபை ஊழியர் அன்பு ஏசையா பங்கேற்று கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.










.jpg)