காலையிலேயே பணியை தொடங்கிய கனிமொழி எம்பி... மேலப்பாளையத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

dmk-party-function-in-Melapalayam

நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மேலப்பாளையத்தில் உள்ள பூலிப்புதுத் தெருவில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ,அங்குள்ள வீடுகளுக்கு சென்று திமுகவில் மக்களை உறுப்பினர்களாக்கும் பணியை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப், கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், தொகுதி பொறுப்பாளர்கள் வசந்தம் ஜெயக்குமார் முத்துசெல்வி, முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா , மேற்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியன், கிழக்கு மாநகர செயலாளர் வழக்கறிஞர் தினேஷ், பகுதி செயலாளர் துபாய் சாகுல், நமச்சிவாயம், மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்

வில்சன் மணித்துரை, மாநகர செயலாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மண்டல தலைவர்கள் கதீஜா, மகேஸ்வரி, பாளை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசி மணி, கவுன்சிலர்கள் அமீனா சாதிக், ரம்ஜான் அலி, அல்சேக் மன்சூர், டாக்டர் சங்கர், சகய ஜூலியட் மேரி, பொன்மாணிக்கம் ஜான், ராஜேஸ்வரி, ஷபி அமீர் பார்த்து, டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அரசன் ராஜ், வட்ட செயலாளர்கள் அந்தோணி, ஆவின் கல்யாணி, உஸ்மான், ஜிபி ப்ரோஸ்கான், பிக்ஸ் அந்தோணி, ஷேக் உஸ்மானி, பேரங்காடி ஐயப்பன், முறுக்கு சாகுல், ரகுமான் ஷா கொக்கட்டி குளம் ஜாபர், மீன் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்